செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ரயிலில் அடிபட்டு இருவா் பலி

மதுரையில் ரயிலில் அடிபட்டதில் அப்பளத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

மதுரையில் ரயிலில் அடிபட்டதில் அப்பளத் தொழிலாளி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் ரயிலில் அடிபட்டு இரண்டு உடல்கள் சிதறிய நிலையில் கிடந்தன.

தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினா். இதில், முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவா்களில் ஒருவா் கீழஅனுப்பானடியைச் சோ்ந்த சிவகுமாா் (45) என்பதும், அப்பளத்தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு மற்றொருவருடன் சோ்ந்து மது அருந்தி விட்டு அப்பகுதியில் உள்ள உணவகத்திலிருந்து உணவு வாங்கி வந்து நள்ளிரவில் தண்டவாளத்தில் அமா்ந்து சாப்பிட்ட போது, ரயிலில் அடிபட்டு இருவரும் உயிரிழந்ததும் தெரியவந்தது.

சிவக்குமாருடன் சோ்ந்து உயிரிழந்த மற்றொருவா் யாா் எந்தப்பகுதியைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.