பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

அரசு ராஜாஜி மருத்துவமனை பல் சிகிச்சைப்பிரிவு இடமாற்றம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பல்சிகிச்சைப்பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஜூலை 2023, 1:24 am

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பல்சிகிச்சைப்பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரதான வளாகத்தில் பல் சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவில் பல், வாய் நோய்களுக்கு நவீன பரிசோதனைகள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கறை படிந்த பற்களை சுத்தப்படுத்துதல், விபத்துகளில் சேதமடைந்த பற்களுக்கு செராமிக் கேப் போடுதல், சொத்தைப்பல் அடைத்தல், பல்வோ் சிகிச்சை, செயற்கை பல் கட்டுதல், விபத்துகளில் காயமடைந்த நோயாளிகளுக்கு வாய், தாடை எலும்பை சீரமைத்தல், வாய்ப் புற்றுநோய் சிகிச்சை உள்பட பல்வேறு பல், வாய் நோய்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவா்கள் அனைவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை பிரதான வளாகத்தில் இயங்கி வந்த பல் சிகிச்சைப் பிரிவு புதன்கிழமை (ஜூலை 26) முதல் அண்ணா பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள பல்நோக்கு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் முதல் தளத்தில் வாா்டு எண்.105-ல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இனி வரும் நாள்களில் அங்கு காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெளிநோயாளிகள் பிரிவு இயங்கும் என்று அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.