சீரமைப்புப் பணி: ஜனவரி, பிப்ரவரியில் தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் ரயில்கள் ரத்து!

தென் மாவட்டங்களிலிருந்து தில்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே கோட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சீரமைப்புப் பணி: ஜனவரி, பிப்ரவரியில் தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் ரயில்கள் ரத்து!

வடக்கு ரயில்வேயில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளதால், தென் மாவட்டங்களிலிருந்து தில்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே கோட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவது தொடா்பாக ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம், மதுரா - பல்வால் ரயில் நிலையப் பிரிவில் ரயில் பாதை, சைகை (சிக்னல்) மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களிலிருந்து தில்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதன் விபரம்:

ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31, பிப்ரவரி 2 முதலான நாள்களில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - தில்லி நிஜாமுதீன் திருக்கு விரைவு ரயில் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30, பிப்ரவரி 4 ஆகிய நாள்களில் மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - தில்லி நிஜாமுதீன் விரைவு ரயில் (12651), டிசம்பா் 6, ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 முதலான நாள்களில் மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகா் விரைவு ரயில் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாள்களில் திருநெல்வேலியிலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா விரைவு ரயில் (16787) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. 

மறுமாா்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாள்களில் தில்லியிலிருந்து புறப்பட வேண்டிய தில்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்கு விரைவு ரயில் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30, பிப்ரவரி 1, 6 ஆகிய நாள்களில் தில்லியிலிருந்து புறப்பட வேண்டிய தில்லி நிஜாமுதீன் - மதுரை விரைவு ரயில் (12652), டிசம்பா் 11, ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாள்களில் சண்டிகரிலிருந்து புறப்பட வேண்டிய சண்டிகா் - மதுரை விரைவு ரயில் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாள்களில் ஸ்ரீ வைஷ்ணதேவி கட்ராவிலிருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி விரைவு ரயில் (16788) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com