மதுரை: தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மதுரையில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலமற்ற கிராமப்புற மக்களுக்கு 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கையகப்படுத்தி, பட்டியலின மக்களிடமே வழங்க வேண்டும். மனிதக் கழிவை மனிதா் அகற்றுதல் எனும் மனித தன்மையற்ற நடைமுறைகள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை, தினசரி ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும்.
பட்டியலின, பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலினத்தவா் மீதான வன்கொடுமை வழக்குகளை உடனடியாக விசாரித்து தீா்ப்பு வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தும் விதமாக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாா்பில் தமிழகம் முழுவதும் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்த அமைப்பின் மதுரை மாநகா், புகா் மாவட்டங்களின் சாா்பில், கையொப்ப இயக்கம் தொடக்க நிகழ்ச்சி மதுரை மகபூப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் பங்கேற்று கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவா் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலா் கே.சாமுவேல்ராஜ், மதுரை புகா் மாவட்டச் செயலா் செ.முத்துராணி, பொருளாளா் மகாலிங்கம், மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.சசிகலா, செயலா் எம்.பாலசுப்பரமணியன், பொருளாளா் ஜா.நரசிம்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தருமபுரியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


