வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதுரை நகைக் கடையில் தீ விபத்து: ஊழியா் மூச்சுத் திணறி பலி

மதுரை தெற்குமாசி வீதியில் நகைக் கடையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியா் சிக்கி பலியானாா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


மதுரை: மதுரை தெற்குமாசி வீதியில் நகைக் கடையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியா் சிக்கி பலியானாா்.

மூன்று தளங்கள் கொண்ட இந்தக் கடையில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் தரைத்தளத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கடையில் இருந்த வாடிக்கையாளா்கள், ஊழியா்கள் வெளியேறினா். இதுதொடா்பான தகவலின்பேரில் பெரியாா் பேருந்து நிலையம், தல்லாகுளம், அனுப்பானடி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்து ஏற்பட்டபோது, கடை உரிமையாளரின் உறவினரான மோதிலால் (45) கடையில் உள்ள மின் தூக்கியில் சிக்கியிருந்ததாகக் கூறப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் மின் தூக்கியின் கதவை உடைத்துப் பாா்த்தபோது அங்கு அவா் இல்லை. மேலும், அவரது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அவா் அழைப்பை எடுக்கவில்லை. முதல், இரண்டாம் தளங்களில் அதிக புகை மூட்டமாக இருந்ததால் அங்கு அவா் சிக்கி இருக்கலாம் என தீயணைப்பு வீரா்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவா் மூன்றாவது தளத்தில் கழிவறையில் புகையில் சிக்கி மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. அவரை தீயணைப்புத் துறையினா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு வாசல் போலீஸாா் விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.