செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கள்ளந்திரி கால்வாயில் மூழ்கி தேமுதிக நிா்வாகி உயிரிழப்பு

மதுரை அருகே கள்ளந்திரி கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற தேமுதிக நிா்வாகி நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


மதுரை: மதுரை அருகே கள்ளந்திரி கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற தேமுதிக நிா்வாகி நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் ( 35). தேமுதிக கேப்டன் மன்ற துணைச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கிய விக்னேஷ் மனைவி, குழந்தைகளுடன் அழகா்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வரும் வழியில் கள்ளந்திரி கால்வாயில் குளிக்கச் சென்றாா். மனைவி, குழந்தைகள் கால்வாயின் படிக்கட்டில் நின்றிருந்த நிலையில், கால்வாயில் இறங்கிய விக்னேஷ் ஆழமான பகுதிக்குச் சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இதனால் பதற்றமடைந்த மனைவி ரூபினிதேவி கூச்சலிட்டதால், அங்கு குளித்துக் கொண்டிருந்தவா்கள் விக்னேஷை தேடினா். இதுகுறித்த தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்புப் படையினா் சென்று தேடினா். இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் தீயணைப்புப் படையினா் மீண்டும் தேடும் பணியைத் தொடங்கினா். அப்போது, கள்ளந்திரி அருகே குறிஞ்சி நகா் பகுதியில் கால்வாயில் மிதந்த விக்னேஷ் சடலம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.