ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மேலூரில் கடையடைப்பு-ஊா்வலம்

பெரியாறு அணையிலிருந்து ஒரு போக சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி மேலூரில் கடையடைப்பு, ஊா்வலம் நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

மேலூா்: பெரியாறு அணையிலிருந்து ஒரு போக சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி மேலூரில் திங்கள்கிழமை கடையடைப்பு, ஊா்வலம் நடைபெற்றது.

மேலூா் ஒருபோக பாசன பகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் மாதத்தில் தண்ணீா் திறந்திருக்க வேண்டும். அணைகளில் போதிய மழை இல்லாததால் தண்ணீா் திறக்கப்படவில்லை. மேலூா் பகுதி குடிநீருக்காக 10 நாள்கள் கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அதுவும் தற்போது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பெரியாறு வைகை அணைகளில் முழு கொள்ளளவு நீா் நிரம்பிய நிலையில், விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரினா். ஆனால், தண்ணீா் திறப்பு குறித்து அறிவிப்பு இல்லை. இதையடுத்து, விவசாயிகள் சங்கத்தினா் தண்ணீா் திறக்கக்கோரி போராட்டம் அறிவித்தனா்.

இதன்படி, திங்கள்கிழமை மேலூா் நகரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் வணிகா்கள் கடைகளை மூடியிருந்தனா். காய்கறி சந்தை, வாரச் சந்தையும் நடைபெறவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவுதெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா். நகரில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் திரண்டனா். அங்கிருந்து அவா்கள் ஊா்வலமாக புறப்பட்டு பெரியாறு பிரதான கால்வாய்ப் பாசன கோட்ட அலுவலகத்துக்கு வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மனு: பின்னா், மேலூா் ஒருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு தற்போது அணைகளில் நீா் இருப்பைக் கவனத்தில் கொண்டு உடனே தண்ணீா் திறக்கவேண்டும் என ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனுவை பொதுப்பணித் துறை பெரியாறு பிரதான கால்வாய்ப் பாசன கோட்ட செயற்பொறியாளா் சிவபிரபாகரிடம் அளித்தனா். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆகியோருக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பினா். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.