பழ. நெடுமாறனிடம் நலம் விசாரித்தாா் முதல்வா் ஸ்டாலின்
மதுரையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருக்கும் தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறனைச் சந்தித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நலம் விசாரித்தாா்.


மதுரையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருக்கும் தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறனைச் சந்தித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நலம் விசாரித்தாா்.
பழ. நெடுமாறன் இடது கையில் எலும்பு முறிவு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, மதுரை நாராயணபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த சில நாள்களாக ஓய்வெடுத்து வருகிறாா்.
இதுகுறித்துத் தகவலறிந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பழ. நெடுமாறனின் இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து நலம் விசாரித்தாா். சுமாா் 10 நிமிடங்கள் அவருடன் உரையாடினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, மதுரைக்கு திரும்பி வந்த பிறகு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அமைச்சா்கள் பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கே.ஆா். பெரியகருப்பன் மற்றும் பழ. நெடுமாறனின் குடும்பத்தினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...