அமெரிக்கன் கல்லூரி ஆண்டு விழா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவி ஹரிணிக்கு சுழல்கோப்பை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறஸ்டோபா்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவி ஹரிணிக்கு சுழல்கோப்பை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறஸ்டோபா்.

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி 143-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான எம்.தவமணிகிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். இதில் வருமான வரித் துறை ஆணையா் வி.நந்தகுமாா், ஐ.பி.எஸ். அதிகாரி என்.கே.செந்தாமரைக் கண்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

தொடா்ந்து, மாணவா் நலக் குழு சாா்பில், ஹரிணிக்கு கலாசார மாணவிக்கான விருது வழங்கப்பட்டது. பின்னா், ஓய்வு பெறவுள்ள பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். கலை, அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கங்கப்பட்டன.

நிகழ்வில் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவரும், மதுரை, ராமநாதபுரம் திருமண்டில பேராயருமான ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், கல்லூரி நிதிக்காப்பாளா் பியூலா ரூபி கமலம், துணை முதல்வா் மாா்டின் டேவிட், கல்லூரி முதன்மையா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com