ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மேலூரில் திமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

மேலூரில் திமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

Updated On :2 ஏப்ரல் 2024, 11:30 pm

மேலூா்: மதுரை மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலகத்தை மேலூரில் வணிகவரி, பத்திர பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். மேலூரில் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா, திமுக நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு திமுக சட்டத்திருத்தக் குழு உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கரு.தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் பி.மூா்த்தி தோ்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசினாா்.

நிகழ்வுகளில் மேலூா் நகா்மன்றத் தலைவா் முகமதுயாசின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டியன், அய்யாவு, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ப.காளிதாஸ், மெய்யா், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.