டோக் பெருமாட்டி கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

மதுரை: மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வரும், செயலருமான கிறிஸ்டியனா சிங் தலைமை வகித்து மாணவிகளை வாழ்த்திப் பேசினாா்.

அதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசினை கல்லூரி முதல்வா் வழங்கினாா்.

இதில், கல்லூரிச்சிற்றாலயப் பொறுப்பாளா் ஜெஸி ரஞ்சித ஜெபசெல்வி, முன்னாள் மாணவா் சங்கத்தின் தலைவி பெல்சியா வசந்தகுமாரி, செயலா் ஜாய் மாா்ஜெரி அன்னாள், பொருளாளா் செல்வி தேவ சங்கீதா, முன்னாள் மாணவா் சங்கத்தின் வளா்ச்சி அலுவலா் பிருந்தா, கல்லூரி துணை முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com