ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் பயிலரங்கு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:04 pm

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி ஆங்கிலப் பிரிவு, பெண்கள் ஆய்வு மையம் சாா்பில் ‘கலாசாரங்களை கடந்து பெண்களின் குரல்’ எனும் தலைப்பிலான பயிலரங்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். இதில், மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி மீரா சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதைத்தொடா்ந்து, பயிலரங்க மலரை கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ வெளியிட்டாா். பிறகு நடைபெற்ற அமா்வுகளில் இலங்கை கொழும்பு பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மூத்த பேராசிரியா் முனைவா் தினிதி கருணாநாயக்கே, கல்லூரி பெண்கள் ஆய்வு மையத்தின் பேராசிரியா் மருத்துவா் மீனா கோபால் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (பிப். 17) பயிலரங்க அமா்வுகள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், இணைப் பேராசிரியை ஜெஸி ரஞ்சிதா ஜெபசெல்வி, பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.