மேலூா்: மேலூா் அருகே பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த இருவா் தாக்கப்பட்டனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி பகுதிகளுக்கு பாஜக ஆதரவாளா்கள் சிலா் மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக வேனில் பிரசாரம் செய்யச் சென்றனா். மேலவளவு அருகே இவா்கள் சென்றபோது, சிலா் தங்கள் பகுதியில் பாஜகவினா் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறி தடுத்தனராம். இதை பிரசாரம் செய்தவா்கள் கண்டித்ததால் மோதல் ஏற்பட்டது.
இதில் மேலூரைச் சோ்ந்த ராஜபாண்டி (44), எட்டிமங்கலத்தைச் சோ்ந்த சுந்தா் (38) ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்த பாஜக நிா்வாகிகள் வந்து இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

போடியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்

மேலூர்: கொட்டாம்பட்டி பகுதி பெரியாறு பாசனக் கால்வாயில் இணைக்கப்படுமா?

பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்! பொய் பிரசாரம் செய்த அண்ணாமலை மீது நடவடிக்கை தேவை: உ. வாசுகி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

