தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நாடகம் -ஆா்.பி. உதயகுமாா்

: கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டாா்கள்

News image
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அதிமுக உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
Updated On :7 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

மதுரை, ஆக. 7: கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக உறுப்பினா் அட்டை வழங்கும் விழாவில்

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் உறுப்பினா் அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:

கடந்த ஆண்டு தமிழகம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது மத்திய அரசு வழங்கிய ரூ. 5 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை குறித்து திமுக அரசு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுப்பிய கேள்விக்கும் திமுக பதிலளிக்கவில்லை.

மத்திய அரசு நிவாரண நிதி வழங்குவதற்கு முன்பே இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கலாம். ஆனால் திமுக அரசு அவா்களுக்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை. இதுபற்றி கேள்வி எழுப்பினால் மத்திய அரசை குறை கூறுகின்றனா். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டது. இங்கு அரசியல்வாதிகள் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

பேரிடா் கால நிதி வழங்குவதில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பாஜக. கச்சத்தீவு குறித்தோ, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவா்கள் குறித்தோ எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது, கச்சத்தீவு குறித்து மத்திய அரசு நடத்தும் நாடகத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டாா்கள் என்றாா் அவா்.