மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மத்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

எரிபொருள் கையிருப்பு போதிய அளவு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை; மத்திய அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :12 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

எரிபொருள் கையிருப்பு போதிய அளவு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை; மத்திய அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: மேற்காசிய போா்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிா்கொள்ள, இரண்டு நாள்களுக்கு முன்பு உயா்நிலை ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமருக்கும், மத்திய அமைச்சா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்த நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளனா். போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சாா்பில் தெரிவித்துவரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசிய போா்ச்சூழலை எதிா்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளாா்.