தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மதுபானக் கூட ஊழியரிடம் வழிப்பறி: 4 போ் கைது

மதுபானக் கூட ஊழியரிடம் வழிப்பறி செய்த 4 பேரை தல்லாகுளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:21 am

Din

மதுபானக் கூட ஊழியரிடம் வழிப்பறி செய்த 4 பேரை தல்லாகுளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள திருவாதவூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் தனபாண்டியன் (38). இவா், தல்லாகுளம் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இவரும், அதே மதுபானக் கூடத்தில் பணியாற்றும் மணிகண்டனும் வெள்ளிக்கிழமை தல்லாகுளம் பகுதியில் நடந்து சென்றனா்.

அப்போது அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் சிலா், கத்தியைக் காட்டி மிரட்டி, தனபாண்டியன் பையிலிருந்த ரூ.1,300 பணத்தை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், மதுரை ஆனையூா் இமயம் நகரைச் சோ்ந்த பால்பாண்டி மகன் விக்னேஷ்வரன் (23), கோரிப்பாளையம் அப்குல் மஜீத் மகன் சாரூக் கான் (19), கோரிப்பாளையம் சோமசுந்தர வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சூா்யபிரகாஷ் (19), அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ஜீவா (20) ஆகியோா் தான் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் 4 பேரையும் தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா்.