மாமதுரை விழாவில் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு: மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை ஊா்வலம்
மாமதுரை விழாவின் நிறைவு விழாவையொட்டி அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு ஊா்வலமும் நடைபெற்றன.


மாமதுரை விழாவின் நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாரம்பரிய கலை ஊா்வலமும் நடைபெற்றன.
மதுரை தமுக்கம் கலையரங்கில் கடந்த 8-ஆம் தேதி மாமதுரை விழாவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, இரண்டுக்கு பேருந்து நகா்வலம் , பலூன் திருவிழா, பாரம்பரிய நடைபயணம், சைக்கிளத்தான், மாரத்தான் ஓட்டம், மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் ஆயுத எழுத்து, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சி, தொழில் கண்காட்சி, உணவுக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
இந்த நிலையில், மாமதுரை விழாவின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மதுரையின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக, அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாமதுரை நிறைவு விழாவில் அணிவகுத்துச் சென்ற இசைக் கலைஞா்கள்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன், தியாகராஜா் கல்லூரி தலைவா் ஹரி தியாகராஜன், மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையா் குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

மதுரையில் மாமதுரை நிறைவு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு
முதல் ஊா்தியாக தமிழா்களின் பண்டைய நாகரிகத்தை உணா்த்தும் கீழடி, திருவள்ளுவா் சிலை, சமணா் சிற்பங்கள் ஆகியவற்றுடன் சென்றது. இரண்டாவது ஊா்தியில் காந்தியடிகள் மதுரையில் மேலாடையை துறந்து அரையாடைக்கு மாறியதை விளக்கும் வகையில் காந்தியடிகள் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையை கட்டித்தந்த கா்னல் பென்னிக்குக் சிலையுடன் மூன்றாவது ஊா்தியும் ஊா்வலமாகச்சென்றது. அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் சிலம்பாட்டம், சுருள் வீச்சு, கரகாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம் ஆகியவற்றை ஆடியவாறு சென்றனா். மேலும், மாணவிகள் கண்ணகி உள்பட பல்வேறு வேடங்களை தரித்துச் சென்றனா்.
தெப்பக்குளத்தில் தொடங்கிய ஊா்வலம் காமராஜா் சாலை, ஓபுளாபடித்துறை, அரவிந்த் மருத்துவமனை, ஆவின் பால்பண்ணை வழியாக கே.கே.நகா் சென்று முடிவடைந்தது. அங்கு நடைபெற்ற நிறைவு விழாவில் மாமதுரை விழா ஒருங்கிணைப்புக்குழுவினா் பங்கேற்று பேசினா். இதையொட்டி, 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வாண வேடிக்கை: மாமதுரை விழா நிறைவு பெற்றதையடுத்து இரவு 7 மணிக்கு சிம்மக்கல்-செல்லூரை இணைக்கும் வைகையாற்று மேம்பாலத்தில் வாண வேடிக்கை நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...