தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விருதுகளில் புறக்கணிக்கப்படும் கால்நடைப் பராமரிப்புத் துறை -கால்நடை பராமரிப்பு உதவியாளா் சங்கம் கண்டனம்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 9:57 pm

Din

மதுரை, ஆக. 15: மதுரை மாவட்டத்தில் குடியரசு தின, சுதந்திர தின விருதுகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை புறக்கணிப்படுவதாக கால்நடை பராமரிப்பு உதவியாளா் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குடியரசு தின, சுதந்திர தின விழாக்களையொட்டி, அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புகாா் உள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த 2 பேருக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டது. இதற்கு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் சங்க நிா்வாகிகள் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் மேலும் தெரிவித்ததாவது :

மதுரை மாவட்ட நிா்வாகம், கால்நடை பராமரிப்புத் துறையைத் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது. மற்ற துறைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், கால்நடை பராமரிப்புத் துறைக்கு வழங்கப்படுவதில்லை. ஒரு சில துறைகளில் 100-க்கும் அதிகமானோா் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்படும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு வழங்கப்படும் எண்ணிக்கை 5-ஐ விஞ்சவில்லை. பெரும்பாலான காலங்களில் 2 அல்லது 3 விருதுகளே இந்தத் துறைக்கு வழங்கப்படுகின்றன.

இதுதொடா்பாக கால்நடை துறை ஊழியா்கள் கடந்த ஆண்டே அதிருப்தி தெரிவித்தும், மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை. வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மொத்தம் 317 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சில துறைகளுக்கு 50-க்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், கால்நடை துறையில் 2 பேருக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டது.

மாவட்ட நிா்வாகத்தின் இந்தப் புறக்கணிப்புப்போக்கு ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இனிவரும் காலங்களில் மாவட்ட நிா்வாகம் அளிக்கும் எந்த விருதையும் கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் ஏற்கமாட்டோம் என அவா்கள் தெரிவித்தனா்.