மகன் கொலை: தாய்க்கு ஆயுள் தண்டனை
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மகனைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.


மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மகனைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பேரையூா் அருகே உள்ள வி. குச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா். இவா் ஆனந்தஜோதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களது மகன் ஜீவா (5). இந்த நிலையில், ஆனந்தஜோதிக்கு, மருது என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது.
இதை நேரில் பாா்த்த ஜீவா, தனது தந்தை ராம்குமாரிடம் தெரிவித்துவிடுவதாக கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த தாய் ஆனந்த ஜோதி, கடந்த 10.1.2020 அன்று மகன் ஜீவாவை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தாா். இது தொடா்பாக ஆனந்த ஜோதி, மருது ஆகிய இருவா் மீதும் வி. சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.
மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், மகனைக் கொலை செய்த தாய் ஆனந்த ஜோதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா். ஜோசப் ஜாய் தீா்ப்பளித் தாா். குற்றம் நிரூபிக்கப்படாததால் மருதுவை விடுவித்தாா் நீதிபதி. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...