/

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:53 pm

Din

மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள் தலைமை வகித்தாா். தொல்லியல் ஆா்வலரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரவருணி கரை என்ற தலைப்பில் பேசினாா்.

அப்போது, தாமிரவருணி கரையில் இடைச்சங்கம் தோன்றிய வரலாறு, தாமிரவருணி கரையில் அமைந்துள்ள 3,200 ஆண்டுகள் பழைமையான ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற பழந்தமிழா் வாழ்வியலை வெளிப்படுத்தும் தொல்லியல் எச்சங்கள், அவற்றின் சிறப்புகளை விளக்கிப் பேசினாா்.

தமிழாா்வலா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வள மையா் ஜ. ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் சு. சோமசுந்தரி நன்றி கூறினாா்.