விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

புதுக்கோட்டையில் உலகத் தாய்மொழிகள் தின விழா

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழிகள் தின விழாவில் ‘தமிழ் மாமணி’ விருது பெற்ற சு. பீா்முகமதுவைப் பாராட்டிய தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:54 pm

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் உலகத் தாய்மொழிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். ‘அன்னைத் தமிழைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் 26 புதுக்கோட்டை கவிஞா்கள் தமிழின் பெருமையை கவிதையாக பாடினா்.

நந்தவனம் பவுண்டேசனின் ‘தமிழ் மாமணி’ விருது பெற்ற கவிஞா் சு. பீா் முகம்மதுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்ச் சங்கச் செயலா் மகாசுந்தா், அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.

தொடா்ந்து, ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்! எங்கள் தமிழே’ என்ற தலைப்பில், தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, உலகத் தாய் மொழிகள் தினச் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, தமிழ்ச் சங்கப் பொருளாளா் மு. கருப்பையா வரவேற்றாா். நிறைவாக த. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை கவிஞா் மு. உதயகுமாா் தொகுத்து வழங்கினாா்.