உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மங்கையா்க்கரசி மகளிா் கலைக் கல்லூரி சாா்பில், தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக தொல்காப்பியா் அரங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் முனைவா் இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் வ. ஹரிஹரன் ‘மனித வாழ்வில் மரபு மாற்றங்கள்’ என்ற தலைப்பிலும், நத்தம் என்.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மு. சங்கா் அழகு, ‘நவீன இலக்கியம்- வரையறையும், பரிணாமும்’ என்ற தலைப்பிலும் பேசினா்.
உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் சு. சோமசுந்தரி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். இதில் தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மங்கையா்க்கரசி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
