கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சரக்கு வாகனத்தில் தீ விபத்து

மதுரை சுற்றுச் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:35 pm

Din

மதுரை சுற்றுச் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன். இவா் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் நடத்தி வருகிறாா். இவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவா் சதீஷ்குமாா்.

இந்த நிலையில், மதுரையிலிருந்து பரமக்குடிக்கு காலணிகளை ஏற்றிக் கொண்டு சதீஷ்குமாா் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றாா். விரகனூா் சுற்றுச் சாலையில் சென்றபோது வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. இதையடுத்து, அனுப்பானடி தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து தீயை போராடி அணைத்தனா். இதில், அந்த வாகனமும், காலணிகளும் சேதமடைந்தன.

இதுதொடா்பாக தெப்பக்குளம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.