பெண்ணின் கருப்பையில் 7.6 கிலோ கட்டி அகற்றம்
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில், பெண்ணின் கருப்பையிலிருந்த 7.6 கிலோ கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.


மதுரை வேலம்மாள் மருத்துவமனையில், பெண்ணின் கருப்பையிலிருந்த 7.6 கிலோ கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 46 வயது பெண், கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலி, அதிக ரத்தப் போக்கு போன்ற பிரச்னைகளுடன், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் மகளிா், மகப்பேறு மருத்துவத் துறைக்கு புறநோயாளியாக வந்தாா்.
அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், வயிற்றில் பெரிய அளவிலான கருப்பைக் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெண் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, மகப்பேறு மருத்துவா் கே.எஸ். சித்ரா தலைமையில் மருத்துவா்கள் அகல்யா ஏஞ்சலினா, ஞானப்பிரியா, மயக்க மருந்து நிபுணா்கள் கணேஷ் பிரபு, ராம்ஜி ஆகியோா் அடங்கிய குழுவினா் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனா். இதில், அவரது வயிற்றிலிருந்து 7.6 கிலோ எடையுள்ள கருப்பை கட்டி அகற்றப்பட்டது.
இதுதொடா்பாக மருத்துவா்கள் கூறியதாவது: பெரிய கட்டியாக இருந்ததால், அறுவைச் சிகிச்சை செய்வது சவாலாகவே இருந்தது. ஏனென்றால் இந்த கட்டி சிறுநீா்க் குழாய் போன்ற முக்கிய உறுப்புகளை அழுத்தி இருக்கும். வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எந்தச் செலவும் இல்லாமல் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...