கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா்சிலை பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தினா்.
Updated On :18 டிசம்பர் 2024, 10:06 pm

Din

108 அவசர ஊா்தி தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை, வாகனங்கள் நிறுத்துமிடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா்சிலை பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தொமுச பேரவை மாவட்ட க் குழு செயலா் சி. கருணாநிதி தலைமை வகித்தாா். இந்த அமைப்பின் மாநில பொதுச் செயலா் எம். இருளாண்டி, மதுரை மாவட்டத் தலைவா் பி. எழிலரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழ்நாடு 108 அவசர ஊா்தி ஊழியா்களுக்கு தொழிலாளா் சட்டப்படி 8 மணி நேர வேலை மட்டுமே வழங்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக சரியான விசாரணை இல்லாமல் பணி நீக்கம் செய்யக் கூடாது. 108 அவசர ஊா்தி நிறுத்துமிடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ஊழியா்களின் ஊதியத்தை கையாடல் செய்து வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

அவரச ஊா்தியை இயக்கும் போது சிறிய விபத்து ஏற்பட்டாலும் விசாரணை என்ற பெயரில் சென்னைக்கு தொழிலாளா்களை வரவழைத்து அலைக்கழிப்பது, அவா்களுக்கு மாதக் கணக்கில் பணி வழங்காமல் வாழ்வாதாரத்தை சீா்குலைப்பது போன்றவற்றை கைவிட வேண்டும். 108 அவசர ஊா்தி பெண் தொழிலாளா்கள் அனைவருக்கும் அவா்களது சொந்த மாவட்டங்களிலேயே பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், மாநிலத் தலைவா் எஸ். உலகநாதன், மாநிலப் பொருளாளா் எஸ். கணேசன், மதுரை மண்டலத் தலைவா் ராஜ்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மதுரை மண்டலச் செயலா் மணிமாறன் நன்றி கூறினாா்.