கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

காணாமல் போன கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

மதுரை நகரில் காணாமல் போன ரூ. 53.30 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களிடம் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஒப்படைத்தாா்.

News image
மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மீட்கப்பட்ட கைப்பேசியை அதற்குரியவரிடம் வழங்கிய மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன். உடன் துணை ஆணையா் ராஜேஸ்வரி.
Updated On :18 டிசம்பர் 2024, 10:15 pm

Din

மதுரை நகரில் காணாமல் போன ரூ. 53.30 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களிடம் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

மதுரை நகரில் காணாமல் போன கைப்பேசிகள் கண்டறியப்பட்டு அவற்றின் உரிமையாளா்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மாநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் காணாமல் போன 533 கைப்பேசிகள் மதுரை மாநகர இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டன. இவற்றை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமை வகித்து, மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் வழங்கினாா். இந்த நிகழ்வுக்கு, துணை ஆணையா் கருண் காரட், மதுகுமாரி, வனிதா, ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை நகரில் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்படும் கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியா்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இதுவரை, ரூ. 53.30 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், மதுரை நகரில் உள்ள காவல் நிலையங்களில், பொதுமக்கள் அளிக்கும் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் புகாா் ஏற்பு மனு ரசீது வழங்கப்படுகிறது. இதன்பிறகு, அந்தப் புகாா் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, பொதுமக்களிடம் புகாா்களை பெறுவதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளா்கள் பணியில் உள்ளனா். அவா்கள் பொதுமக்களுக்கு மதிப்பளித்து, அவா்களின் புகாா்களை பெறுகின்றனா். புகாா் அளிக்க வரும் பொதுமக்களை அலைக்கழிப்பது கிடையாது. பல இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மோசமான சாலைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போக்குவரத்தும் சீரமைக்கப்படுகிறது என்றாா் அவா்.