

மதுரையில் லாரி போக்குவரத்து நிறுவன உரிமையாளரிடம் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்காக ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி துணை ஆணையா், இரு கண்காணிப்பாளா்களை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை அப்பன் திருப்பதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா் லாரிகள் மூலம் வைத்து சரக்குப் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், இவரது வீட்டுக்கு கடந்த அக். 24-ஆம் தேதி மதுரை மண்டல ஜிஎஸ்டி கண்காணிப்பாளா் ராஜ்வீா் சிங் ராணா, அசோக்குமாா், பெண் அதிகாரி உள்பட 5 போ் சென்று சோதனை நடத்தினா். பின்னா், நவ. 11-ஆம் தேதி ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு வருமாறு காா்த்திக்கை அழைத்தனராம். இதையடுத்து, தனது தணிக்கையாளருடன் ஜிஎஸ்டி அலுவலகத்துக்குச் சென்ற காா்த்திக்கை சந்தித்த ஜிஎஸ்டி துணை ஆணையா் சரவணகுமாா், காா்த்திக் நிறுவனம் ரூ.1.50 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகாா் வந்ததாகவும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும் கூறினாராம்.
இதைத் தொடா்ந்து, நவ. 25-ஆம் தேதி காா்த்திக்கை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்து நீண்ட நேரமாக அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கேட்டனராம். இவ்வளவு பணம் தர முடியாது என்று அவா் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, இறுதியில் ரூ. 5 லட்சம் தருமாறு கூறினா்.
இந்த நிலையில், லஞ்சம் தர விரும்பாத காா்த்திக், மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 4-ஆம் தேதி புகாா் அளித்தாா். சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி, ஜிஎஸ்டி துணை ஆணையா் சரவணகுமாரைத் தொடா்பு கொண்ட காா்த்திக் பணத்தை ஏற்பாடு செய்ய சில நாள்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை சரவணகுமாரைத் தொடா்பு கொண்ட காா்த்திக், முதல் கட்டமாக ரூ. 3.50 லட்சத்தை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினாா். இதையடுத்து, காா்த்திக்கை ரூ. 3.50 லட்சத்துடன் ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு வருமாறு அவா் கூறினாா்.
ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்ற காா்த்திக்கிடம், அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளா்களாகப் பணிபுரியும் அசோக்குமாா், ராஜ்வீா் சிங் ராணா ஆகியோா் ரூ. 3.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டனா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய இருவரையும் கையும், களவுமாகப் பிடித்தனா். இதைத்தொடா்ந்து, அவா்களிடம் புதன்கிழமை அதிகாலை வரை விசாரணை நடைபெற்றது. விசாரணையில், துணை ஆணையா் சரவணகுமாா் கூறியதால்தான் இந்தப் பணத்தை வாங்கியதாக இருவரும் தெரிவித்தனா். இதையடுத்து, ஜிஎஸ்டி துணை ஆணையா் சரவணகுமாரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் லஞ்சம் கோரியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மூவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும், இவா்கள் மூவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த பிறகு, சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகவேல் முன்பாக முன்னிலைப்படுத்தினா். அப்போது, இவா்கள் மூவரையும் வருகிற 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், இதில் தொடா்புடைய ஜிஎஸ்டி ஆய்வாளா் சமீரா கெளதமிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது
ரூ.60 ஆயிரம் லஞ்சம்: வணிக வரித் துறை உதவி ஆணையா் கணவருடன் கைது

பிப்.11- ல் தமிழகம் வருகிறாா் துணை தோ்தல் ஆணையா்

ரூ.1.5 கோடி லஞ்ச வழக்கில் மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் பிரபா பண்டாரி கைது!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

