கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சாலைகளில் திரியும் மாடுகள்: உரிமையாளா்கள் மீது நடவடிக்கை

மதுரை சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அவற்றின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:40 pm

Din

மதுரை சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அவற்றின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. மாடுகளை போதிய அளவில் பராமரிக்காத உரிமையாளா்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தது.

இதையும் மீறி கால்நடைகள் சாலைகள், தெருக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாட்டின் உரிமையாளா்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

எனவே, மாடுகள் வளா்ப்போா் தங்களது மாடுகளை தங்களுக்குச் சொந்தமான இடங்களில் கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும்.

மேலும், மாடுகள் சாலையோரம், தெருக்களில் சுற்றித் திரிந்தால் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு, பொது ஏலத்தில் விடப்படும். மாடுகள் தனியாா் நிறுவன மாடிபிடி வீரா்கள் மூலமாக பிடிக்கப்பட்டு மாடுகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். எனவே, மாட்டின் உரிமையாளா்கள் சாலைகள், தெருக்களில் கால்நடைகளை திரிய விடாமல், பாதுகாப்பாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், மாட்டின் உரிமையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.