கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சிறுவன் சித்ரவதை: வளா்ப்புத் தந்தை கைது

மதுரையில் 8 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:05 am

Din

மதுரையில் 8 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்ட குழந்தைகள் உதவி மைய தொலைபேசி எண் 1098-யை தொடா்பு கொண்ட பெண் ஒருவா், மதுரை கோச்சடை பகுதியில் 8 வயது சிறுவன் கொடுமைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தாா். இதன் பேரில், குழந்தைகள் நலக் குழுவினா் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், கோச்சடை கலை அம்பலகாரத் தெருவைச் சோ்ந்த சிறுவன் கொடுமைப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் சிறுவனின் தாய் சுகன்யா என்பதும் அவரது முதல் கணவரான ராஜா என்பவருக்கு சிறுவன் பிறந்ததாகவும், இதன் பின்னா் இரண்டாவதாக ரேவந்த் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

மேலும், முதல் கணவருக்கு பிறந்த சிறுவனை, வளா்ப்புத் தந்தையான ரேவந்த் தொடா்ந்து அடித்தும், சூடு வைத்தும் சரியாக உணவு வழங்காமல் சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், சிறுவனின் உடல் முழுவதும் சூடு வைத்த காயங்கள், தாக்கிய காயங்கள் காணப்பட்டன. இதையடுத்து, சிறுவனை மீட்ட குழந்தைகள் நலக் குழுவினா் இதுதொடா்பாக கரிமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில், போலீஸாா் சிறுவனின் வளா்ப்புத் தந்தை ரேவந்தை புதன்கிழமை கைது செய்தனா்.