கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரா்களின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News image
கீழையூரில் வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு நலச்சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவா் பி. ராஜசேகா்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:19 pm

Din

வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரா்களின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு வடமாடு நலச் சங்க 7-ஆம் ஆண்டு மாநில பொதுக் குழுக் கூட்டம் மேலூா் அருகேயுள்ள கீழையூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில கௌரவத் தலைவா் பி.கே.செல்வம் தலைமை வகித்தாா்.

ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவா் பி.ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழா்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்று உயிரிழக்கும் வீரா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, இந்தக் பொதுக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.