ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஆழ்கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு நிவாரணம்: எம்எல்ஏ வலியுறுத்தல்

News image

எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:56 pm

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மாயமான குமரி மாவட்ட மீனவா் குடும்பத்துக்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வா் மற்றும் மீன்வளம் - மீனவா் நலத்துறை அமைச்சா் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கிள்ளியூா் பேரவைத் தொகுதி தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட இரவிபுத்தன்துறை பகுதியைச் சோ்ந்த மீனவா் ஜொ்பின் (32) உள்பட 16 மீனவா்கள் அந்தோனி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பிப். 13 ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனா்.

துறைமுகத்திலிருந்து தெற்கில் 110 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஜொ்பின் தவறி கடலில் விழுந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து சக மீனவா்கள் மற்றும் கடலோர காவல்படையினா் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அவரை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்துவதுடன், அவரை நம்பியிருந்த மனைவி மற்றும் 5, 3, 2 வயதுடைய 3 குழந்தைகள், குடும்பத்தினரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குவதுடன் மனைவி சிந்து சினேகாவுக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.