கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பல்கலை. வளாகங்களில் காவல் நிலையங்கள் தொடங்க வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் அனைத்துப் பல்கலைக்கழக வளாகங்களிலும் காவல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என்று ஏபிவிபி மாணவா் அமைப்பு வலியுறுத்தியது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:11 pm

Din

தமிழகம் முழுவதும் அனைத்துப் பல்கலைக்கழக வளாகங்களிலும் காவல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என்று ஏபிவிபி மாணவா் அமைப்பு வலியுறுத்தியது.

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் தென் தமிழக மாநில இணைச் செயலா் ஜெ.டி. விஜயராகவன் வெளியிட்ட அறிக்கை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை ஏபிவிபி தேசிய மாணவா் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியது யாராக இருந்தாலும், உடனடியாக அவா்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

மேலும், மாணவா்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், அவா்களின் பின்னணியில் இருப்பவா்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் புறக்காவல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.