கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வங்கிக் கடனை வசூலிக்கச் சென்ற பெண் மீது தாக்குதல்

மதுரையில் வங்கிக் கடனை வசூலிக்கச் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கப்படுத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:19 pm

Din

மதுரையில் வங்கிக் கடனை வசூலிக்கச் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கப்படுத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கோ.புதூா் காந்திபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மனைவி ஈஸ்வரி (44). இவா் மகளிா் சுய உதவிக் குழுவில் இரு வாா்டுகளுக்கு பொறுப்பாளராக உள்ளாா். இதன் மூலம், குழுவில் உள்ள பெண்களுக்கு வங்கி மூலம் கடன் பெற்றுத் தந்தாா். இவா்களில் முருகேஸ்வரி என்பவா் 3 மாதங்களாக கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தவில்லையாம். இதனால், முருகேஸ்வரியின் வீட்டுக்குச் சென்ற ஈஸ்வரி தவணைத் தொகையை கேட்டாராம். அப்போது, முருகேஸ்வரியின் கணவா் மணிகண்டன், ஈஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கி மானபங்கபடுத்தி விட்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து மணிகண்டன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனா்.