/

யோகநரசிங்கப் பெருமாள் கோயிலில் எழுந்தருளிய காளமேகப்பெருமாள்

கஜேந்திர மோட்ச வைபவத்தில் காளமேகப்பெருமாள் பக்திப் பெருக்கு

News image

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் இருந்து, யானைமலை யோகநரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு கஜேந்திர மோட்ச வைபவத்துக்காக பல்லக்கில் கள்ளா் திருக்கோலத்தில் புறப்பட்ட பெருமாள்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:20 pm

மேலூா்: திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவா் கள்ளா் திருக்கோலத்தில் சனிக்கிழமை யானைமலை யோகநரசிங்கப் பெருமாள் கோயிலுக்குச் சென்று கஜேந்திரமோட்ச வைபவத்தில் பங்கேற்றாா்.

மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் காளமேகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து பெருமாள் கள்ளா் திருக்கோலத்தில் பல்லக்கில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சிக்காக, யானைமலை யோகநரசிம்மா் கோயிலுக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டாா். வழிநெடுகிலும் திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளிய பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 8 மணிக்கு யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் பெருமாள் மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளினாா். அங்கு தைலகாப்பு நடைபெற்றது. இரவு யோகநரசிங்கப் பெருமாள் கோயிலில் காளமேகப் பெருமாள் திருமஞ்சனமானாா். அதிகாலை 1 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பாடாகி மோட்ச மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சமளித்து, பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருமோகூா் கோயிலுக்குப் புறப்பட்டாா்.