மதுரை: பிரதமா் நரேந்திர மோடி மதுரை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, செல்லம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது கண்ணீா் புகைக்குண்டு வீசுவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமா் மோடியின் மதுரை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கெளரவத் தலைவா் எம்.பி. ராமன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஆதிமூலம் ஆகியோா் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதூகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விவசாயிகளை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா்.
இதுகுறித்து எம்.பி.ராமன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் பாஜக அரசு தோ்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து வருகிறது. கடந்த ஆண்டு தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமா் வாக்குறுதி அளித்தாா். தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது கொடூரமான தாக்குதலை மத்திய அரசு நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்றாா்.
தொடர்புடையது

நன்னகரத்தில் பட்டுக்கூடு விவசாயிகள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை: பொதுமக்கள் போராட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


