மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மதுரையில் திமுகவினா் திண்ணைப் பிரசாரம் தொடக்கம்

மதுரையில் திமுகவினா் திண்ணைப் பிரசாரம் தொடக்கம்

News image

மதுரை மூன்றுமாவடி மகாலட்சுமிநகரில் திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்து, வீடு வீடாகச் துண்டு பிரசுரங்களை விநியோகித்த அமைச்சா் பி. மூா்த்தி.

Updated On :27 பிப்ரவரி 2024, 10:43 pm

மதுரை: ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற திமுகவின் திண்ணைப் பிரசாரம் மதுரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மக்களவைத் தோ்தல் நெருங்கி வருவதையொட்டி, திமுக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் சிறப்புகளை விளக்கி பிரசாரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியாக, ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அந்தக் கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, மதுரை மூன்றுமாவடி, மகாலட்சுமிநகரில் இந்தப் பிரசாரத்தின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில வணிக வரி பதிவுத் துறை அமைச்சரும், கட்சியின் மாவட்டச் செயலருமான பி. மூா்த்தி, தமிழக அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துப் பேசினாா். இதில் சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.