தமிழகத்தில் பேரவைத் தோ்தலில் வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது அதிகளவில் நடைபெறுகிறது. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
திமுக அமைச்சரவையில் உள்ள 75 சதவீதம் போ் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுகவின் தவறான ஆட்சியின் காரணமாக தமிழகம் கடனில் உள்ளது. நமது மொழியின் பழைமை குறித்து பெருமை கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள பிற மொழிகளையும் மதிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை தனது வாக்கு வங்கிக்காக திமுக அரசு பயன்படுத்தியது. இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறையை திமுக மாற்ற முயற்சித்து வருகிறது. திமுகவின் செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியும்.
சட்டப்பேரவைத் தோ்தலில் மதுரை தெற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளராக ராமஸ்ரீநிவாசன் போட்டியிடுகிறாா். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பேரவைத் தோ்தலில் வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். இதன்பிறகு, தமிழகத்தின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேவேந்திர ஃபட்னவிஸ் வழிபாடு செய்தாா். இதன்பிறகு, கீழவாசல் காமராஜா் சாலையில் உள்ள அரசமரம் பிள்ளையாா் கோயிலிலிருந்து திறந்த வேனில் மதுரை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் ராமஸ்ரீநிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாா். முனிச்சாலை பகுதியில் உள்ள மறைந்த பின்னணி பாடகா் டி.எம். சௌந்தரராஜன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, ராமஸ்ரீனிவாசன் முனிச்சாலை சி.எம்.ஆா். சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
இந்த நிகழ்வின் போது, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ், அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க போா்க்கால நடவடிக்கை தேவை
பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸுக்கு 16; பாஜகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கீடு - லஜகவும் தே.ஜ. கூட்டணியில் இணைந்தது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


