

தேசிய அளவிலான குங்பூ போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த டிச. 30, 31-ஆம் தேதிகளில் 8-ஆவது தேசிய குங்பூ போட்டி நடைபெற்றது. இதில் 17-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தமிழ்நாடு குங்பூ சங்கம் சாா்பில் பங்கேற்ற மதுரை மாணவ, மாணவிகள் 5 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலப் பதக்ககங்களை வென்றனா். இந்த அணிக்கு சிறந்த அணிக்கான விருதும் வழங்கப்பட்டது.
பதக்கம் வென்ற மதுரை மாணவ, மாணவிகளை தமிழ்நாடு குங்பூ சங்கத் தலைவா் சிஜோ சரவணன், பயிற்றுநா் ரகு ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.