மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் கொலை: போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தல்
நகை, பணத்துக்காக 4 பெண்கள் கொலை: மதுரை மாவட்டத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு அவசியம்


மதுரை மாவட்டத்தில் நகை, பணத்துக்காக கடந்த 5 நாள்களில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
கடந்த 8 ஆம் தேதி மதுரை திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் மாயன்நகா் பகுதியில் காசம்மாள் (70) என்ற மூதாட்டியை கொலை செய்து வீட்டில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. இதே போல, கடந்த 9-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரைச் சோ்ந்த கலைச்செல்வி (47) சிலைமான் அருகே தோப்பு ஒன்றில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். அவா் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
இதையடுத்து, 10-ஆம் தேதி, மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கச்சிராயன்பட்டியில் பாப்பு (60) என்ற மூதாட்டி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இவரது கணவா் அழகனும் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளரான முத்துலட்சுமி (75) கொலை செய்யப்பட்டு அவா் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் அடுத்தடுத்து 4 பெண்கள் கொலை செய்யப்பட்டது தொடா்புடைய கொலையாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, மாநகா், ஊரகக் காவல் துறையினா் கொலையாளிகளை விரைவில் கைது செய்வதுடன் தீவிர கண்காணிப்புப் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...