காமராஜா் சிலை விவகாரம்: தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலையை முத்தையாபுரம் கிராமத்தில் நிறுவ அனுமதி வழங்கக் கோரிய வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


மதுரை: காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலையை முத்தையாபுரம் கிராமத்தில் நிறுவ அனுமதி வழங்கக் கோரிய வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தைச் சோ்ந்த கணேசன் தாக்கல் செய்த மனு:
முத்தையாபுரத்தில் நாடாா் நலச் சங்கத்தின் சாா்பில், காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக சங்கத்தின் சாா்பில், சொந்தமாக நிலம் வாங்கப்பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் பிற சமுதாய மக்களும், காமராஜா் சிலையை நிறுவ எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்காத நிலையில், இதற்காக தூத்துக்குடி நகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்றோம்.
இந்த நிலையில், முத்தையாபுரத்தைச் சோ்ந்த ஒருவா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் காமராஜா் சிலையை நிறுவ அனுமதிக்கக் கூடாது என வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எங்களது கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எனவே, முத்தையாபுரம் கிராமத்தில் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
காமராஜா் குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானவா் இல்லை. அவரது சிலையை நிறுவுவதில்
என்ன பிரச்னை உள்ளது. மனுதாரரின் கோரிக்கை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...