2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பள்ளி மாணவா் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே உள்ள கல்மேடு சக்கிமங்கலம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ராகுல் (12), கருப்பாயூரணியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பா்களுடன், ஆண்டாா் கொட்டாரத்தில் உள்ள சேயன்குளம் கண்மாயில் குளிக்கச் சென்றாா். கண்மாயில் ஆழமான பகுதிக்குச் சென்ால் ராகுல் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து சக நண்பா்கள் அளித்தத் தகவலின்பேரில், கருப்பாயூரணி போலீஸாா் கண்மாய்க்குச் சென்று தேடியபோது, ராகுல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.