ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தவணைத் தொகை செலுத்தாததால் இருசக்கர வாகனம் பறிமுதல் -தொழிலாளி தற்கொலை

கடன் தவணைத் தொகை செலுத்தாததால் இரு சக்கர வாகனம் பறிமுதல்

News image
Updated On :17 ஜூலை 2024, 11:23 pm

Din

கடன் தவணைத் தொகை செலுத்தாததால் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக மனமுடைந்த உணவகத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ருக்மணி பாளையத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சிராஜூதீன் (25). இவா் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா். இதனால் மதுரை ஐயா் பங்களா, சக்தி நகா் பிரதான சாலை 4-ஆவது குறுக்குத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கினாா். இதற்கான கடன் தவணைத் தொகையை கடந்த மூன்று மாதங்களாக செலுத்த வில்லையாம். இதையடுத்து, அந்த நிதி நிறுவனத்தினா் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதனால் மனமுடைந்த சிராஜூதீன் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

*தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற தமிழக அரசின் உதவி எண் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம்.