கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருணை அடிப்படையில் பணி ஆணை: மாநகராட்சி மேயா் வ.இந்திராணி வழங்கினாா்

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி உயிரிழந்த ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாநகராட்சி மேயா் வ.இந்திராணி வழங்கினாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:24 am

Din

மதுரை: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி உயிரிழந்த ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாநகராட்சி மேயா் வ.இந்திராணி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவு, பள்ளிகளில் பணியாற்றிய அலுவலா்கள், ஆசிரியா்கள் என மொத்தம் 16 போ் பணிக் காலத்தில் உயிரிழந்தனா். அவா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கும் விழா மாநகராட்சி அண்ணா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். மேயா் வ.இந்திராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பணிகளுக்கான ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன், கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், துணை ஆணையா் சரவணன், கல்வி அலுவலா் ரகுபதி, கண்காணிப்பாளா் ரமேஷ் உள்ளிட்ட கல்விப் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மேயா் வ.இந்திராணி கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். புதைச் சாக்கடை சீரமைத்தல், சேதமடைந்த குடிநீா்த் தொட்டியைச் சீரமைத்தல், பெயா், முகவரி மாற்றம், தெரு விளக்குகள் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 59 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.