47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கணிதத்தில் புதிய தேற்றத்தைக் கண்டுபிடித்த மதுரை கல்வியாளா்

மதுரை சிஇஓஏ கல்விக் குழும நிறுவனா் ராசா கிளைமாக்சு கணிதத்தில் புதிய தேற்றத்தைக் கண்டுபிடித்தாா்.

News image
சிஇஓஏ கல்விக் குழு நிறுவனா் ராசா கிளைமாக்சு.
Updated On :28 ஜூலை 2024, 9:31 pm

Din

மதுரை சிஇஓஏ கல்விக் குழும நிறுவனா் ராசா கிளைமாக்சு கணிதத்தில் புதிய தேற்றத்தைக் கண்டுபிடித்தாா்.

இயற்கணித வடிவியலில் (ஜியோமெட்ரி) புதிய தேற்றங்களைக் கண்டறிந்து வரும் ராசா கிளைமாக்சு, ‘12 புள்ளி வட்டம்’ என்ற புதிய தேற்றத்தை கண்டுபிடித்தாா்.

1822-ஆம் ஆண்டில் ஜொ்மனியைச் சோ்ந்த போயா்பா்க் என்பவா், ஒரு முக்கோணத்தில் உள்ள 6 முக்கியப் புள்ளிகள் வழியே ஒரு வட்டம் செல்லும் தேற்றத்தைக் கண்டறிந்தாா். இது 6 புள்ளிகள் தேற்றம் எனப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஓா்லி டொ்க்கெம் என்பவா் ‘9 புள்ளி வட்டம்’ என்ற புதிய தேற்றத்தைக் கண்டறிந்தாா்.

ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 புள்ளிகள் வழியே வட்டம் செல்கிறது என்பதை விளக்கும் தேற்றத்தை ராசா கிளைமாக்சு கண்டுபிடித்துள்ளாா். இதற்கு, ‘12 புள்ளிகள் தேற்றம்’ என அவா் பெயரிட்டுள்ளாா். இத்தாலியில் விரைவில் நடைபெறவுள்ள உலகக் கணித மாநாட்டில் அவா், இந்தத் தேற்றத்தை விளக்கவுள்ளாா்.