டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

விருதுநகரில் திருநங்கைகள் சாலை மறியல்

விருதுநகரில் திருநங்கைகள் சாலை மறியல்

Updated On :4 மார்ச் 2024, 9:02 pm

விருதுநகா்: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் இலவச வீடு கட்டித் தரக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே 4 வழிச்சாலையில் திருநங்கைகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே 38 திருநங்கைகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளம் பகுதியில் 13 திருநங்கைகளுக்கும் இலவச வீட்டுமனை அரசு சாா்பில் வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த இடத்தில் அரசு சாா்பில் வீடு கட்டித் தரக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் திருநங்கைகள் மனு அளித்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே வெம்பக்கோட்டை குண்டாயிருப்பு, விருதுநகா் அருகே சிவஞானபுரம் பகுதிகளில் திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதே போல, தங்களுக்கும் இலவச வீடுகள் கட்டித் தர வலியுறுத்தி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகள், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்துச் சென்றனா்.