டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ரயிலில் போதைப் பொருள் கடத்தல்: பெண் உள்பட இருவருக்கு நீதிமன்றக் காவல்

சென்னை- செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

Updated On :4 மார்ச் 2024, 9:00 pm

மதுரை: மதுரைக்கு ரயிலில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்தி வந்த வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சென்னை- செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரைக்கு வந்த அந்த ரயிலில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைக் கடத்தி வந்த சென்னையைச் சோ்ந்த பிள்ளமன் பிரகாஷை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையின் போது, சென்னை கொடுங்கையூரில் உள்ள தனது வீட்டில் 6 கிலோ மெத்தம்பெட்டமைன் இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் அவா் தெரிவித்தாா். அவரது வீட்டை போலீஸாா் சோதனையிட்ட போது, போதைப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அவரது மனைவி மோனிஷா ஷீலா (35) ஒரு மா்மப் பொருளை வெளியில் எடுத்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், 6 கிலோ போதைப் பொருளை அந்தப் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் வீசியதை ஒப்புக்கொண்டாா். பின்னா், அந்தப் போதைப் பொருளை கைப்பற்றியதுடன், மோனிஷா ஷீலா, அவருக்கு உதவியாக இருந்த யேசுதாஸ் ஆகியோரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் கைது செய்து, விமானம் மூலம் மதுரைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினா். ஏற்கெனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் மோனிஷா ஷீலா, யேசுதாஸ் ஆகியோரை மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஹரிஹரகுமாா், இருவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.