
Updated On :8 மார்ச் 2024, 5:53 pm

பேரையூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மதுரை மாவட்டம், பேரையூா் கைலாசபுரத்தைச் சோ்ந்தவா் தங்கபாண்டி. இவா் அந்தப் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மகன் அருண்குமாா் (22). இவா் புதுச்சேரி தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையின் உணவகத்தை கவனிப்பதாகக் கூறியுள்ளாா். இதற்கு மறுப்புத் தெரிவித்த தங்கப்பாண்டி , மகனைக் கண்டித்தாா். இதனால், மனமுடைந்த அருண்குமாா் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...