ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிறப்புச் சொற்பொழிவு

உலகத் தமிழ்ச் சங்கத்தில் சிறப்புச் சொற்பொழிவு

News image
Updated On :12 மார்ச் 2024, 11:07 pm

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக் கூடத்தில் 6-ஆவது சிறப்புச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஔவை ந. அருள் தலைமை வகித்தாா். மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் நா. ரஞ்சித்குமாா் முன்னிலை வகித்தாா்.

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், கவிஞருமான அ. ரோஸ்லின், சங்கப் பாடல்கள் சுட்டும் பெண் குரல் என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, தமிழ் நிலத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 41 பெண் புலவா்கள் கவி பாடியுள்ளனா் என்பதன் மூலம், பெண்களின் கருத்தைக் கேட்டறியும் சமூகமாக பண்டைத் தமிழ்ச் சமூகம் இருந்ததை அறிய முடிகிறது.

பெண்களின் குரல் பண்டைக் காலத்தில் மரியாதைக்குரியதாகவும், நிலத்தை மதிக்கும் குரலாகவும் இருந்துள்ளது என்றாா் அவா். தமிழ்க் காட்சிக் கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.