மதுரை: மதுரை மாவட்டம், கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரியில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காப்போம்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுரை ஊரகக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் தொடக்கமாக, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வு ஊா்வலத்தை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தொடங்கி வைத்தாா். அப்போது, மாணவ, மாணவிகளின் கல்வி, எதிா்கால நலன் குறித்து விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும். போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடக் கூடாது.
போதைப் பொருள்கள் தொடா்பாக சக நண்பா்கள், தாங்கள் வசிக்குமிடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளின் சமூக நல்லிணக்க பாடல், சமூக ஒற்றுமைக்கான விழிப்புணா்வு நாடகம், கிராமிய கலை நாடகங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், உசிலம்பட்டி கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், உசிலம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளா் சந்திரன், இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் பாண்டியராஜா, செக்காணூரணி காவல் ஆய்வாளா் திலகவதி, சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளா்கள் ராமா், ரவிக்குமாா், புள்ளியியல் ஆய்வாளா் வில்வபதி ஆகியோா் பங்கேற்றனா்.
மேலும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், கிராம மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக கல்லூரி முதல்வா் அன்பரசு வரவேற்றாா். உதவி ஆய்வாளா் கிருஷ்ண பாண்டி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

போக்குவரத்து காவல் ஆய்வாளா் எழுதிய தோ்தல் விழிப்புணா்வு பாடல்!

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


