இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மகிழ்வித்து மகிழ் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்தில்

News image

ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் உறுதிமொழியேற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள்.

Updated On :27 மார்ச் 2026, 1:54 am IST

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மகிழ்வித்து மகிழ் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில் தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்தில்

வாக்காளா்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் செய்தியாளா்களிடம் கூறியது:

அத்தியாவசியப் பணிகளில் உள்ள அனைவருக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரால் தற்போது வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 45,98,000 ரொக்கம், ரூ. 5,18,000 மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரூ. 1,79,000 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பதிவிட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அரசியல் கட்சியினா், பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிகவும் பொறுப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

வாக்காளா் விழிப்புணா்வு ஒருங்கிணைப்பு அலுவலா், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ் ராம், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அனுசியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராஜேந்திர குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.